×

தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பு: பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

சென்னை: தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார். பயிற்சி மையத்தை நடத்தும் ஒருவர்தான் தனது மையத்தில் பயின்ற 2,000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்துள்ளார். காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் இதுபோன்ற தேர்ச்சி உள்ளதா என ஒப்பிட்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள கடந்த ஆண்டே குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது என்று அமைச்சர் கூறினார்.


Tags : TNPSC ,Minister ,Palanivel Thiagarajan , Exam Malpractice, TNPSC, Explanation, Minister Palanivel Thiagarajan
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்