பாஜவில் இருந்து விலகி பேரூராட்சி தலைவி திமுகவில் இணைந்தார்

தென்தாமரைகுளம்:  குமரி மாவட்டம் கொட்டாரத்தில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க  கட்சி அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா  நேற்று நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்  பாபு தலைமை வகித்தார்.கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்  மேயர் மகேஷ் ,திமுக மாநில அமைப்பு துணை செயலாளர் ஆஸ்டின் ஆகியோர்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து  கொண்டனர். இதில் பா.ஜ.வை  சேர்ந்த  தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப்  ,கொட்டாரம் பேரூராட்சி சுயேச்சை உறுப்பினர் செல்வக்கனி,  அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி அதிமுக துணை தலைவர் சரோஜா, மற்றும்  பாஜவினர் பலர்  தி.மு.கவில் இணைந்தனர்.

Related Stories: