×

கொடைக்கானலின் பசுமைக்கு ஆபத்து காட்டுத்தீயின் கோரத்தால் கட்டாந்தரையானது வனம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சுற்றியுள்ள வனப்பகுதிகள் சிலவற்றில் கடந்த வாரம் காட்டுத்தீ ஏற்பட்டது. குறிப்பாக சிட்டி வியூ பகுதியில் 3 நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதன்பிறகு பெய்த மழையால் காட்டுத்தீ தானாக அணைந்தது. தற்போது தீ முழுமையாக அணைந்துள்ள நிலையில் வனப்பகுதிகளில் அதன் கோர முகத்தை காண முடிகிறது. குறிப்பாக சிட்டி வியூ பகுதியில் காட்டுத்தீக்கு அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள், புற்கள்  எரிந்து கருகியுள்ளது.

இதனால் பசுமையான வனப்பகுதி கருமை நிறத்தில் கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது. இதனால் வனவிலங்குகள் பல இடம் பெயர்ந்து விட்டன. மான்கள் உள்ளிட்ட ஒரு சில விலங்குகள்  உணவின்றி பரிதவித்து வருகின்றன. இவற்றுக்கு தீவனம் வழங்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கஇயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Kodaikanal ,Katantharai forest , Kodaikanal's greenery is a threat to Katantharai forest due to forest fire
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை