×

முதல் டி 20 போட்டி தென்ஆப்பிரிக்காவை வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியது

செஞ்சூரியன்:தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என டெஸ்ட் தொடரை இழந்தது. இதைத்தொடர்ந்து 1-1 என ஒருநாள் தொடரை சமன் செய்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முதலாவது டி20 போட்டியில் நடைபெற்றது. இப்போட்டி மழை காரணமாக 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 11 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 22 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய பிரண்டன் கிங் 8 பந்தில் 23 ரன்னும், கைல் மேயர்ஸ் 6 ரன்னிலும் வீழ்ந்தனர். இதையடுத்து வந்த சார்லஸ் 28 ரன், பூரன் 16 ரன் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் அந்த அணி 10.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் வெற்றிக்கு கேப்டன் பவல் பக்க பலமாக இருந்தார். அவர் 18 பந்தில் 5 சிக்சருடன் 43 ரன் குவித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை வகிக்கிறது.

Tags : West Indies ,South Africa ,T20 , First T20I, South Africa, West Indies,
× RELATED டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இன்று மோதல்