×

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதல்!

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தாண்டு முதல் முறையான பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை அறிமுகம் செய்தது. இந்த போட்டிகள் கடந்த 4ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பல்வேறு அணிகள் பங்கேற்றுள்ளனர். மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றது.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோதியுள்ளது. லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி தலா 12 புள்ளிகள் பெற்றாலும் ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பை அணி 2-வது இடத்தையும், உ.பி.வாரியர்ஸ் 3-வது இடத்தையும் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் 4-வது, 5-வது இடங்களை பிடித்து வெளியேறிது. நேற்று முன்தினம் இரவு நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி.வாரியர்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மகளிர் பிரிமீயர் லீக் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று (26.03.2023) இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இறுதிப்போட்டியில் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

Tags : Mumbai Indians ,Delhi Capital ,Women's Premier League Cricket Series , Mumbai Indians - Delhi Capitals clash today in Women's Premier League Cricket Series Final!
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!.