×

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்

திருப்பூர்: திருப்பூர் செரங்காட்டை சேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி சத்யாவை (28) பிரசவத்திற்காக கடந்த 18ம் தேதி  திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு 19ம் தேதி சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று மாலை கோபி வெளியே சென்று விட்டார். குழந்தையுடன் இருந்த சத்யா சிறிது நேரம் தூங்கியுள்ளார். எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. தகவலறிந்து திருப்பூர் தெற்கு போலீசார் வந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்துடீன் முருகேசன் கூறுகையில், குழந்தையை சத்யா அருகில் இருந்த நபரிடம் பார்க்க கொடுத்ததாக தெரிகிறது. அந்த நபர் குழந்தையை கடத்தி சென்றாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.

Tags : Tirupur Government Hospital , Kidnapping of baby boy in Tirupur Government Hospital
× RELATED திருப்பூர் அரசு மருத்துவமனையில் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்