படிக்காததை கண்டித்ததால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி

சேலம்: சேலம் அஸ்தம்பட்டி இட்டேரி ரோடு பகுதியில் வசித்து வரும் 15 வயது கொண்ட சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், சரிவர படிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென மாணவி, வீட்டின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்தார். பக்கத்தில் இருந்த ஓட்டு வீட்டின் மீது விழுந்ததும், மாணவி அலறித்துடித்தார். உடனே பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் மாணவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு மாணவியை பரிசோதித்ததில், அவருக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: