×

புதிதாக 1249 பேருக்கு கொரோனா

புதுடெல்லி:  நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 1249 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நாடு முழுவதும் புதிதாக 1249 கொரோனா பாதிப்புக்கள் பதிவாகி உள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கையானது 7927ஆக உயர்ந்துள்ளது.கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலத்தில் தலா ஒரு உயிரிழப்பு பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் 1,05,316பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சுகாதார துறையின் இணைய தகவலின்படி நாடு முழுவதும் 220.65கோடி கொரோனா தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது.Tags : Corona for 1249 new people
× RELATED பிற்படுத்தப்பட்டோர், தலித்களுக்கு...