கட்கரியை மிரட்டிய கர்நாடக சிறைக்கைதி சிக்கினார்

நாக்பூர்:   நாக்பூரில்  உள்ள, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு கடந்த 21ம்  தேதியன்று அடுத்தடுத்து மூன்று போன் அழைப்புகள் வந்தன. அதில் பேசிய மர்ம  ஆசாமி, ரூ.10 கோடி கேட்டு ஒன்றிய அமைச்சருக்கு  கொலை மிரட்டல் விடுத்தார்.  அதெற்கென யுபிஐ ஐடியில், பணத்தை செலுத்துமாறும் கூறியிருந்தார். இந்த  வழக்கில் போன் அழைப்பை வைத்து ஆய்வு ெசய்ததில் கர்நாடகா மாநிலத்தின் பெலகாவியில் உள்ள சிறையில் உள்ள கைதி ஜெயேஷ் பூஜாரி என்பது தெரியவந்தது.  சோதனை செய்ததில், மங்களூரூவில் உள்ள ரைசாவின் வங்கிக் கணக்கு  இணைக்கப்பட்டு உள்ளது. இவர் சிறைக்கைதியின் காதலியாக இருக்கலாம் என்று  போலீசார் தெரிவித்தார்.

Related Stories: