மேளப்பூடி ஊராட்சியில் குப்பைகள் சேகரிக்க மூன்று சக்கர சைக்கிள்கள்: ஒன்றிய குழு துணைத் தலைவர் வழங்கினார்

பள்ளிப்பட்டு: கிராமத்தில்  குப்பைகள் சேகரிக்க ஏதுவாக  ரூ.1.4 லட்சம் மதிப்பீட்டில்  மூன்று சக்கரை சைக்கிள்கள் ஒன்றிய குழு துணை தலைவர் வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு  அருகே  மேளப்பூடி ஊராட்சியில்   மூன்றாயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  ஊராட்சி தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று சேகரிக்கும் குப்பைகள் தரம் பிரித்து எடுத்துச் செல்ல மூன்று சகக்ர சைக்கிள்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று ஊராட்சி சார்பில் ஒன்றிய குழு துணைத் தலைவருக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து ஒன்றிய குழு பொது நிதியிலிருந்து ரூ.1.4 லட்சம் மதிப்பீட்டில் நான்கு மூன்று சக்கர வாகனங்கள் வாங்கப்பட்டு  ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் வடக்குமலையானிடம் ஒன்றிய குழு துணைத் தலைவர் பொன்.சு.பாரதி ஒப்படைத்தார். ஊராட்சி பணியாளர்கள்,  பொதுமக்கள் உடனிருந்தனர்.

Related Stories: