×

திண்டுக்கல் அருகே கார் தேசிய நெடுஞ்சாலையில் மோதி விபத்து: 4 பேர் படுகாயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 8 மணியளவில் பொன்னம்பலம், அவரது மனைவி கீதா ஆகியோர் மேட்டூரிலிருந்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு செல்வதற்காக கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர்.

மேலும் அந்த காரில் ஓட்டுநர் சாந்தப்பன் மற்றும் பொன்னம்பலம் மகன் சந்தோஷ்குமார் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். வெங்கமலை கணவாயை அடுத்து ரங்கநாதபுரம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் பலமாக மோதியதில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேடசந்தூர் தீயணைப்பு துறையினர் காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

மேலும் காயமடையாக 4 பேரையும் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   


Tags : National Highway ,Dindigul , Car collides with National Highway near Dindigul: 4 injured
× RELATED சென்னை – திருப்பதி தேசிய...