சென்னை: நடிகர் அஜீத்குமாரின் தந்தை சுப்ரமணியம் (84) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
அஜீத்குமாரின் தந்தையின் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அஜீத்குமாரின் தந்தையின் மறைவு குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
நடிகர் அஜீத்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜீத்குமாரின் தந்தை மறைவிற்கு அமைச்சர் உதயநிதி சட்டையின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன் என எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஜீத்குமாரின் தந்தை சுப்பிரமணியத்தின் உடல் இன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

