பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பேரவையில் இரங்கல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் த.மாரிமுத்து, ப.தங்கவேலு, சி.நா.மீ.உபயதுல்லா, கு.சீனிவாசன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு: இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராம் 4-2-2023 அன்று மறைவுற்ற செய்தியறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.

வேலூரில் பிறந்து, தமது இனிமையான குரலாலும், இசை வல்லமையாலும்  வாணி ஜெயராம் பல்வேறு மொழிகளில் 10,000க்கும் மேற்பட்ட பாடலை பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர். மாநில விருதுகளையும் தேசிய விருதுகளையும் பெற்று, இந்த ஆண்டின் பத்மபூஷண் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெருமைக்குரியவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது” என்றார்.

Related Stories: