×

அதிமுக எம்பி சி.வி.சண்முகத்துக்கு பாதுகாப்பு ஏன்? அறிக்கை கேட்டு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலன்று கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, சி.வி.சண்முகம் தனது துப்பாக்கி உரிமத்தையும் புதுப்பித்து தரவில்லை எனவும், பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தை தெரிவிக்கவும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் அளித்த மனுவை பரிசீலிக்குமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.தினகரன் ஆஜராகி எதிர்ப்பு தெரிவித்தனர். காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்து மீரன் ஆஜராகி வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் சி.வி.சண்முகத்தின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கபட்ட நடவடிக்கை குறித்த நிலைஅறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : AIADMK ,Shanmugam , Why security for AIADMK MP CV Shanmugam? Court order after hearing the report
× RELATED சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி...