×

கோயில் திருவிழா கொடியேற்றத்துடன்தொடக்கம்

திருத்தணி: திருத்தணி காந்திரோடு பகுதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயிலில் திருவிழா நேற்று காலை 6 மணிக்கு  கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, கணபதி, நவகிரக ஹோமம், கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தினமும் காலையில் மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் சிறப்பு தீபாராதனையும், தினமும் மதியம், 1 மணி முதல் மாலை 5:30 மணி வரை மகாபாரத தொடர் சொற்பொழிவும் நடைபெறும். அடுத்த மாதம் 9ம் தேதி காலை துரியோதனன் படுகளமும், மாலை 6  மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது.

Tags : Temple , Temple festival starts with flag hoisting
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில்...