மும்பை: நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் விலகுவார் என்று தெரிகிறது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது முதுகுத் தண்டில் ஏற்பட்ட காயத்தால் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. தொடரில் சிறப்பாக விளையாட அந்தந்த அணிகள் ஏற்கனவே பயிற்சிகளை தொடங்கிவிட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சில அணிகள் தங்களுக்கான கேப்டன்களை அறிவித்துவிட்டது.
ஏற்கனவே கொல்கத்தா அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலியாவுடனான அடுத்து நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க முடியாமல் போனது.
ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து இன்னும் மீளாததால் கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கேப்டன் பொறுப்பை யாரிடம் கொடுப்பது என அணி நிர்வாகம் ஆலோசனையில் உள்ளது, இதில் சுனில் நரேன் பெயர் முன்னணியில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.