×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்து.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம்  கூறியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மலைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu ,Meteorological Centre , Thunderstorm likely in Tamil Nadu, Meteorological Department informs
× RELATED கரூர் நெரிசல் வழக்கு: 19ம் தேதி விஜயிடம் மீண்டும் விசாரணை?