×

கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடிய சிறுவர்களில் மேலும் 2 பேர் பிடிபட்டனர்: போலீசார் அதிரடி

கடலூர்: கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடிய சிறுவர்களில் மேலும் 2 பேர் பிடிபட்டனர். கடலூர் சாவடி பகுதியில் அரசின் கூர் நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. குற்றச்செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் இங்கு உள்ளனர். இதனிடையே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த 6 சிறார்கள் நள்ளிரவில் கூர் நோக்கு இல்லத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றுள்ளனர்.

இருவரை வாகன சோதனையில் கடலூர் புதுநகர் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி எஞ்சியவர்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடிய சிறுவர்களில் மேலும் 2 பேர் பிடிபட்டனர். தப்பியோடிய 6 சிறுவர்களில் இதுவரை 4 பேர் சிக்கிய நிலையில் எஞ்சிய 2 சிறுவர்களுக்கும் வலை வீசப்பட்டுள்ளது. அதேபோன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே செயல்பட்ட அன்பு ஜோதி இல்லத்தில் தங்க வைக்கப்பட்டவர்கள் சித்தரவதை செய்யப்பட்டதாக சீல் வைக்கப்பட்டது.

இதனால் அங்கு இருந்தவர்களில் பலரும் அழைத்து வரப்பட்டு கடலூர் தொண்டு நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதில் 5 பேர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Cuddalore , Cuddalore Observation Home, children, caught
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை