×

சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்த வேண்டும்: கொடைக்கானல் மக்கள் வலியுறுத்தல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான சாலையில் கல்லறை மேடு பகுதி வருகை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில், சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள், குடியிருப்புகள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும். ஆனால் பல வருடங்களாகவே இந்த சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படாமல் இருந்து வருகிறது.

இதனால் அப்பகுதி முழுவதிலும் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்குள்ள இயந்திரங்களும் பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த சுத்திகரிப்பு நிலையத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் முறையாக பராமரிக்காமல் இருந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இதிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேறும் கழிவுநீர் பழநிக்கு குடிநீராக செல்லும் ஆற்றில் கலக்கிறது. எனவே இந்த சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Refinery should be implemented: Kodaikanal people insist
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: சிபிசிஐடி ஏடிஜிபி நேரடி விசாரணை