×

4 மாவட்ட நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை.! 62 ஆக உயருகிறது நீதிபதிகளின் எண்ணிக்கை?

சென்னை: 4 மாவட்ட நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்துள்ளது. ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக பி.தனபால் தற்போது பணியாற்றி வருகிறார். இவர்களது பெயர் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும்பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 62 ஆக உயரும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபீக், ஜெ.சத்யநராயண பிரசாத் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு கூடுதலாக நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். 5 பேரையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து திரெளபதி முர்மு உத்தரவிட்டார்.

Tags : Chennai High Court , Collegium recommends appointment of 4 District Judges as Madras High Court Judges. The number of judges increases to 62?
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...