மதுரை: மேலூர் அருகே உள்ள செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டது. மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக மனுதாரர் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் மதுரை ஆட்சியர், மாசுக் கட்டுப்பாடு வாரியம் விரிவான பதில் அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.