ஆவடி புத்தகத் திருவிழாவில் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு: அமைச்சர், எம்பி, எம்எல்ஏ, கலெக்டர் பங்கேற்பு

திருவள்ளூர்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக உள்ள மஞ்சப்பை உபயோகம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களின் பேரணி, கருத்தரங்கம் பிரசார வாகனங்கள் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளை மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், சுற்றுச்சூழல் பொறியாளர் சம்பத்குமார், உதவி பொறியாளர்கள் ரகுகுமார், சபரிநாதன் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை உபயோகப்படுத்தும் வகையில் ரூ.10 நாணயம் மற்றும் நோட்டு செலுத்தி மஞ்சப்பை பெற்றுக் கொள்ளும் வகையில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திலும் நிறுவப்பட்டு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆவடி எச்விஎப் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தில் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் விழிப்புணர்வு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரூ.500க்கு புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு ஒரு மஞ்சப்பையும், ரூ.1000த்திற்கு புத்தகங்களை வாங்குபவர்களுக்கு 2 மஞ்சப்பைகளும் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் இலவசமாக வழங்கி வருகின்றனர். மேலும் ரூ.10 நாணயம் மற்றும் நோட்டு செலுத்தி மஞ்சப்பை பெற்றுக் கொள்ளும் வகையில் மஞ்சப் பை வழங்கும் இயந்திரத்தையும் இந்த அரங்கில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து புத்தகத் திருவிழாவில் கலந்துக் கொண்ட பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், கே.ஜெயக்குமார் எம்பி, ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் சம்பத்குமார், உதவி பொறியாளர்கள் ரகுகுமார், சபரிநாதன் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மஞ்சப்பையை பயன்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Related Stories: