×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்தி வருகிறது. ஈரோடு மாநகராட்சி ஆணையரான சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதியுடைய தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டவர் சிவக்குமார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டார் என்பது குற்றச்சாட்டாகும். முறைகேடு புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் தற்போது சோதனை நடைபெறுகிறது.

இன்று காலை சிவக்குமார் வீட்டில் சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வந்தனர். ஆனால் சிவக்குமார் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்ததால் சோதனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து 2 காவலர்களை வீட்டில் காவலுக்காக நிறுத்திவிட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் திரும்பி சென்றிருந்தனர். பின்னர் சிவக்குமார் குடும்பத்தினர் வீடு திரும்பினர். இதையடுத்து  ஈரோடு லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 5 பேர் கொண்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் வருவாய்துறையை சேர்ந்த 2 அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Sivakumar ,Erode East Constituency , Erode East Constituency By-election, Sivakumar, Raid
× RELATED கப்பலில் கடத்தப்பட்ட ரூ.1 லட்சம் கோடி...