×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான் மற்றும் வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கின் விசாரணையானது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. இந்த வழக்கின் கூடுதல் விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், உதகையில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொலைத்தொடர்பு தகவல்களை ஆராய்ந்து வருவதால் அரசு சார்பில் கால அவகாசம் வழங்க நீதிமன்றத்தில் கோரப்பட்டது. வழக்கில் இதுவரை நடைபெற்ற விசாரணை குறித்த தகவல்கள் அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Tags : Codanadu , Kodanadu murder, robbery case, investigation, April 28
× RELATED கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு: தனபாலிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு..!!