×

திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஒன்றியக்குழு தலைவர் ஆலோசனை நடத்தினார். திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயலலிதா, மகேஸ்வரி, சுந்தர்ராஜன், தமிழரசு, சோமசேகர், லதா, சாமுண்டீஸ்வரி, ஒன்றிய பொறியாளர்கள் குமார், மதியழகன் உள்பட அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் வளர்ச்சி பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார். மேலும் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசியப் பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சேதமடைந்த சாலைகளின் விவரங்களையும், புதிதாக போட வேண்டிய சாலைகளின் விவரங்கள் குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவும் அவர் ஆலோசனை வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகளை செய்யும் அனைத்து ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை நடத்தி அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவர் அறிவுரை வழங்கினார்.

Tags : Thiruvallur Local Development Office , Consultation meeting regarding development works at Tiruvallur Regional Development Office
× RELATED விருதுநகர் மக்களவை தொகுதியில்...