டெல்லி: முல்லை பெரியாறு அணை தொடர்பாக பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தை மார்ச் 28-ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கேரள, தமிழக அரசுகளுக்கு கடந்த ஜனவரி 12-ல் அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார். அணை பாதுகாப்பு தொடர்பான 16-வது கூட்டத்தை கூட்ட ஏதுவாக தேதிகளை அளிக்குமாறு கடிதத்தில் கோரியிருந்தார்.