×

ரூ. 2000 கோடியில் 'நெய்தல் மீட்சி இயக்கம்'.. கடல் அரிப்பை தடுக்க தமிழக அரசு அதிரடி

சென்னை :கடல் அரிப்பைத் தடுக்க ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’ என்ற திட்டத்தை 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செயல்படுத்த உள்ளதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

மீனவர் நலன்: மீனவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள இந்த அரசு அவர்களது சிறப்புத் தேவைகளை நன்கு உணர்ந்து பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மீன்பிடி குறைவு காலத்தில் மீனவர்கள் பயன்பெறும் பொருட்டு ரூ. 5,000 என வழங்கி வந்த சிறப்பு நிவாரணத் தொகையினை ரூ. 6,000 ஆக கடந்த ஆண்டு முதல் இவ்வரசு உயர்த்தி வழங்கி வருகிறது. வரும் நிதியாண்டில் மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணம், மீன்பிடித் தடைக்கால நிவாரணம், மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டங்கள் என 4.3 இலட்சம் மீனவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 389 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பவளப்பாறைகள் மீன்களுக்கு புகலிடம், உணவு அளித்து மீன்குஞ்சுகள் பிழைக்கும் வாய்ப்புகளை அதிகரித்து மீன்வளத்தைப் பாதுகாக்கின்றன. நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட, பாக் வளைகுடா பகுதியில் 3 மாவட்டங்களில் கடற்பகுதியில் 217 செயற்கை பவளப்பாறை அலகுகள் 79 கோடி ரூபாயிலும், பாக் வளைகுடா தவிர ஏனைய மாவட்டங்களில் 200 செயற்கை பவளப்பாறை அலகுகள் 64 கோடி ரூபாயிலும் ஒன்றிய மாநில நிதியுதவியுடன் அமைக்கப்படும்.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம்: பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தாலும், மக்கள்தொகைப் பெருக்கத்தாலும் கடலோர சுற்றுச்சூழலும், கடலோர மக்களின் வாழ்வாதாரமும் வருங்காலங்களில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். கடல் அரிப்பைத் தடுக்கவும், கடல் மாசுபாட்டைக் குறைக்கவும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும், ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’ என்ற திட்டத்தை 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கி நிதியுதவியுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த அரசு செயல்படுத்த உள்ளது.

Tags : Weaving ,Movement ,Tamil Nadu Govt , தமிழ்நாடு ,பட்ஜெட் ,பட்ஜெட்,அதிமுக,வெளிநடப்பு
× RELATED தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கலாம்