×

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஏப். 21-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஏப். 21-ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 3வது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில்; சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு; 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படும். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும். மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். பல்வேறு துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. காலை, மாலை என இரு வேளைகளிலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும். காலை 10 - 2 மணி வரை, மாலை 4 - 8 மணி வரை என இரு நேரங்களில் அவை நடைபெறும். காலை நேரத்தில் கேள்வி நேரம் நடைபெறும் எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu Legislative Assembly ,Speaker ,Appa , Tamil Nadu Legislative Assembly meeting on Apr. To be held till 21st: Announcement by Speaker Appa
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...