×

மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பேருந்துகளை காட்டு யானைகள் வழிமறிப்பு

மஞ்சூர்: மஞ்சூரில், கோவை சாலையில் அரசு பஸ்கள், தனியார் வாகனங்களை 2 காட்டு யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளது. கெத்தையை சுற்றிலும் உள்ள வாழை, பாக்கு மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதுடன் நடு ேராடுகளில் நின்று அவ்வழியாக சென்று வரும் வாகனங்களை வழிமறிப்பது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கோவையில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் மஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அரசு சுமார் 7 மணியளவில் கெத்தை அருகே சென்ற போது நடுரோட்டில் இரண்டு காட்டு யானைகள் வழியை மறித்தபடி நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. இதை கண்ட டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சென்று சாலையோரமாக ஒதுக்கி நிறுத்தினார்.

மஞ்சூரில் இருந்து பயணிகளுடன் கெத்தைக்கு சென்ற அரசு பஸ் மற்றும் கோவைக்கு சென்ற தனியார் வாகனங்களும் யானைகளின் வழிமறிப்பில் சிக்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக யானைகள் அங்கிருந்து நகராமல் அவ்வப்போது வாகனங்களுக்கு அருகில் சென்று வருவதுமாக இருந்ததால் பயணிகள் பீதியுடன் அமர்ந்திருந்தனர். நீண்ட ேநரத்திற்கு பின் யானைகள் இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாாக அங்கிருந்து நகர்ந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பிறகே அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. காட்டு யானைகள் வழிமறிப்பால் மஞ்சூர் கோவை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Manjoor-Coimbatore , Manjur-Coimbatore Road, Govt Bus, Wild Elephants Detour
× RELATED மஞ்சூர்-கோவை சாலையில் குட்டிகளுடன் நடமாடும் 5 காட்டு யானைகள்