×

அமெரிக்கா மற்றும் தென் கொரிய கூட்டு ராணுவ பயிற்சி: வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா பதில்

சியோல்: வடகொரியா மிரட்டலை பொருட்படுத்தாமல் அமெரிக்கா மற்றும் தென் கொரியா ராணுவத்தினர் கூட்டு பயிற்சியை தொடர்ந்து வருகின்றனர். வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் அவ்வப்போது பதற்றம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க நட்புநாடான தென்கொரியா வடகொரியாவுக்கு சவால் விடுக்கும் வகையில், தனது ராணுவ பலத்தை பெருகிவருகிறது.

இந்நிலையில்அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. அதன் ஒருபகுதியாக விமானப்படை ஹெலிகாப்ட்டர்கள் மூலம் ஏவுகணைகளை இடம் மாற்றும் பயிற்சியில் இருநாட்டு வீரர்கள் ஈடுபட்டனர்.

அமெரிக்காவுடன் இணைந்து வான்வெளி தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் எப்-16 போர் விமானங்களும் தென்கொரியாவின் போர் விமானங்களும் வானில் கூட்டாக பறந்து பயிற்சியில் இடுபட்டன. வடகொரியாவின் ஏவுகணை சோதனை, தென்கொரியாவின் போர் பயிற்சியால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.


Tags : US ,South Korea ,North Korea , US, South Korea joint military exercises, North Korea's missile test,
× RELATED வட கொரியாவுக்கு எதிராக எல்லையில்...