×

சென்னையில் மொபைல் செயலி மூலமாக இ - டிக்கெட் எடுத்து மாநகர பேருந்து, மெட்ரோ, மின்சார ரயிலில் பயணிக்கும் புதிய திட்டம் விரைவில் அறிமுகம்!!

சென்னை : சென்னையில் மொபைல் செயலி மூலமாக இ - டிக்கெட் எடுத்து மாநகர பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் புதிய திட்டத்தை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் நடைமுறைப்படுத்த உள்ளது. முதற்கட்டமாக இந்த ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில், மாநகர பேருந்து ஒரே இ - டிக்கெட் மூலம் பயணிக்கும் முறையையும் அடுத்த 3 மாதங்களில் தெற்கு ரயில்வேயுடன் இணைந்து ஒரே டிக்கெட் மூலம் மெட்ரோ, பேருந்துடன் மின்சார ரயிலிலும் பயணிக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என பெருநகர போக்குவரத்து குழும அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை செயல்படுத்த அதிநவீன அப்பிளிக்கேஷன் தயாரிக்கும் பணியில் ஒன்றிய அரசின் கீழ் இயங்கக்கூடிய சிடிஎஸ்சி என்ற centre for development of advanced computing நிறுவனமும் சென்னை ஐஐடி நிர்வாகமும் ஈடுபட்டுள்ளன. இந்த செயலியை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க 3 பொது போக்குவரத்தையும் சேர்த்து எவ்வளவு நேரம் ஆகும், கட்டண விவரம் என்ன என்பன போன்ற தகவலை பெறும் வசதியும் வாகனங்களில் ஏறும் முன் பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட கியூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட உள்ளது. ஒரே டிக்கெட்டில் எளிமையான பயணத்தை கொண்டு வந்தால் நேரமும் அலைச்சலும் மிச்சமாகும் என சென்னை வாசிகள் கூறுகின்றனர்.இந்த திட்டம் சிறப்பாகும் செயல்படும் பட்சத்தில் ஷேர் ஆட்டோ, ஓலா உள்ளிட்ட வாடகை வாகனங்களில் மக்கள் இருந்த இடத்தில் இருந்தே பயணம் செய்யும் வசதி அறிமுகம்படுத்தப்படும் என்று சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது. 


Tags : Chennai , Chennai, Mobile, Processor, - Ticket, City Bus, Metro, Electric Train
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...