நேபாள நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

காத்மண்டு:  நேபாளத்தில் சிபிஎன் மாவோயிஸ்ட் கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா தலைமையில் ஏழு கட்சிகளின் கூட்டணி ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு மார்ச் 9ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஆளும் கட்சியின் கூட்டணி கட்சியான சிபிஎன்-யுஎம்எல் கட்சியை சேர்ந்த சுபாஷ் நெம்யாங்க்கும், எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் சந்திர பவுடேலும் போட்டியிட்டனர். இதில் எதிர்க்கட்சி வேட்பாளர் சந்திர பவுடேலுக்கு பிரசண்டா ஆதரவு தெரிவித்தார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  ஆளும் சிபிஎன் மாவோயிஸ்ட் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக ராஷ்ட்ரிய பிரஜாதந்திர கட்சி(ஆர்பிபி), கே.பி.சர்மா தலைமையிலான சிபிஎன்-யுஎம்எல் கட்சியும், ரவி லாமிசேனே தலைமையிலான ராஷ்ட்ரிய சுதந்திர கட்சியும்(ஆர்எஸ்பி) பிரசண்டா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றன. இதையடுத்து, பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என பிரசண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.   

Related Stories: