அமெரிக்காவில் திருடப்பட்ட ‘பீர்’ வாங்கி விற்ற 2 இந்தியர் மீது வழக்கு

நியூயார்க்: அமெரிக்காவில் திருடப்பட்ட பீர் சரக்கை வாங்கி விற்ற விவகாரத்தில் இரண்டு இந்தியர் உட்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் செயல்பட்டு வரும் இரண்டு உள்ளூர் வணிக நிறுவனங்களில் சுமார் 20,000 டாலர் மதிப்புள்ள திருட்டு பீர் சரக்கை வாங்கி விற்ற புகாரின் அடிப்படையில், இரண்டு அமெரிக்க வாழ் இந்தியர்கள் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மேலும் போலீசார் கூறுகையில்:

குறிப்பிட்ட இரண்டு வணிக நிறுவனங்கள், திருட்டு பீர் சரக்கை வாங்கி விற்று வந்தன. இதுபோன்ற பீர் சரக்கை அந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கி விற்கும் வேலையில் அமெரிக்கவாழ் இந்தியர்களான கேதன்குமார், பியூஷ்குமார் படேல் உள்ளிட்ட 3 பேர் ஈடுபட்டு வந்தனர். திருடப்பட்ட பீரின் மதிப்பு 20,000 டாலர் (ரூ.16.5 லட்சம்). இவர்கள் மூவரும் அடுத்த மாதம் பூர்வாங்க நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்வார்கள் என்றனர்.

Related Stories: