×

திருக்குறுங்குடி கோயிலில் தீர்த்தவாரி: பக்தர்கள் திரளானோர் பங்கேற்பு

களக்காடு: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழாவில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் பங்குனி பிரமோற்சவ திருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. விழா நாட்களில் தினமும் நம்பி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

10ம் திருநாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. நேற்று (18ம் தேதி) காலை நம்பியாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அழகியநம்பிராயர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவில் வைஷ்ணவர்களுக்கு விடை சாதித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

Tags : Thirukurungudi ,Shralanor , Tirthawari at Tirukurungudi Temple: Devotees participate in large numbers
× RELATED கோடைமழை காரணமாக திருக்குறுங்குடியில் விவசாய பணிகள் மும்முரம்