×

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளி மண்டல கீழடுக்கு காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓரிரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், கோடை வெப்பம் சற்று தணிந்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Tags : Tamil Nadu ,Meteorological Inspection , Chance of rain with thunder and lightning in 4 districts of Tamil Nadu in next 3 hours: Meteorological Department
× RELATED 16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற...