×

ஊரணியில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 3 சிறுவர், சிறுமி பலி

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே படமிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது தம்பி லட்சுமணன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். லட்சுமணன் மனைவி தனலட்சுமி குழந்தைகளை கவனித்து வருகிறார்.

இக்கிராமத்தில் உள்ள செட்டி ஊரணியில் நேற்று மதியம்  நாகராஜின் மகள் மீனாட்சி (10) மற்றும் லட்சுமணனின் மகன்கள் மகேந்திரன்(7), சந்தோஷ் (5) ஆகியோர் குளிக்க சென்றனர்.  நீண்ட நேரமாகியும் திரும்பாததால் கிராம மக்கள் ஊரணிக்கு சென்று பார்த்தனர். அங்கு நீரில் மூழ்கி 3 பேரும் இறந்து கிடந்தனர். இது குறித்து உலகம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Drowning in Panini: 3 boys and a girl died in the same family
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...