ரூ.3 லட்சம் கையாடல் பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் சஸ்பெண்ட்

விராலிமலை: திருச்சி மாவட்டம், ஜடமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர் ரமேஷ், கூட்டுறவு சங்கம் மூலம் பெறப்பட்ட மொத்த பாலை ஒன்றியத்திற்கு அனுப்பாமல் விதிகளுக்கு முரணாக தனியார் நிறுவனத்திற்கு அனுப்பிவிட்டு குறைந்த அளவிலான பாலை மட்டும் ஒன்றியத்திற்கு அனுப்பி வந்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் மாவட்ட துணை பதிவாளர் ஜெயபாலன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாலை தனியாருக்கு வழங்கியது, சங்க கணக்குகளை சரியாக பராமரிக்காமல் ரூ.3 லட்சம் வரை கையாடல் செய்தது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அவர், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 81ன் கீழ் ரமேஷை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Stories: