×

அதிமுக பொதுச்செயலாளருக்கு தேர்தல் அறிவித்துள்ளது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளருக்கு தேர்தல் அறிவித்துள்ளது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், சட்ட விதிகளை பின்பற்றாமல் திடீரென தேர்தலை அறிவித்துள்ளது அதிமுகவை கொச்சைப்படுத்தும் செயல். எடப்பாடி பழனிசாமி தரப்பு நடவடிக்கையை சட்டரீதியாக சந்திக்க தயாராகி வருகிறோம். மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் இறுதி வரை உடன் இருந்தவர்கள் நாங்கள் என்று கூறினார்.


Tags : AIADMK ,general secretary ,Panrutty Ramachandran , AIADMK General Secretary, Elections, Panruti Ramachandran
× RELATED குத்தகை முறையில் ஓட்டுனர்,...