திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி, 4வது மண்டலம், 39வது வார்டுக்கு உட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நடைபாதை மற்றும் சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் இடையூறு ஏற்படுவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அதன் அடிப்படையில் நேற்று புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் இருந்து தண்டையார்பேட்டை லட்சுமி கோயில் வரை சாலை ஓரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகளை 39வது வார்டு செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். அப்போது வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார்  அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Related Stories: