×

தெலங்கானாவில் வணிக வளாக தீ விபத்தில் 6 பேர் பலி

திருமலை: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் 9 மாடி கொண்ட வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு 5 முதல் 8வது தளங்களில் தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டிடத்தில் இருந்த பலர் வெளியேற முடியாமல் வணிக வளாகத்திலேயே சிக்கிக்கொண்டனர்.  தீயணைப்பு துறையினர் 5 மணி நேரம் போராடி கிரேன்கள் உதவியுடன் கட்டிடத்தில் சிக்கியிருந்த 13 பேரை மீட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்தனர்.

Tags : Telangana ,shopping complex , 6 killed in Telangana shopping complex fire
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து