பெட்ரோல், டீசல் விலையில் 300வது நாளாக மாற்றமில்லை: கச்சா எண்ணெய் விலை குறைந்தும் மக்களுக்கு பலனில்லை

சேலம்: கடந்தாண்டு  மே 22ம் தேதி சென்னையில் பெட்ரோல் ரூ.8.22 குறைந்து ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.6.70 குறைந்து ரூ.94.24 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.  இந்த விலை குறைப்பு நடவடிக்கைக்கு பின், கடந்த 300 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தவில்லை. கடந்த 10 மாத காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளது.

அதாவது நேற்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 69.12 டாலருக்கு விற்கப்பட்டது. 120 டாலருக்கு மேல் விற்கப்பட்டபோது நிர்ணயித்த அதே விலையில் தற்போதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்று வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வழங்கவில்லை.

Related Stories: