×

டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின்

சென்னை: டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளார். நட்புன்னா என்னான்னு தெரியுமா, ஆகாஷ்வாணி, லிஃப்ட் படங்களில் நடித்தவர் கவின். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான டாடா படம் வெற்றி பெற்றது. இதையடுத்து கவினுக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. அடுத்ததாக ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் பல படங்களுக்கு நடனம் அமைத்த டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன், இந்த படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.தொடர்ந்து காதல் கதைகளில் நடித்து வரும் கவின், இந்த படம் மூலம் ஆக்‌ஷனிலும் கவனம் செலுத்த இருக்கிறாராம். ‘டாடா படத்தில் சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவின் கவர்ந்திருக்கிறார். அவரது கேரியரில் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் படம் முக்கியமாக அமையும். இதில் நடிக்கும் ஹீரோயின் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வருகிறது’ என படக்குழுவினர் தெரிவித்தனர்.

Tags : Gavin ,Satish , Gavin Directed by Dance Master Satish
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...