கொடைக்கானலில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை: வெள்ளி நீர்வீழ்ச்சியில் கடுமையான வெள்ளப்பெருக்கு

திண்டுக்கல்: கொடைக்கானலில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது.  

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக கடுமையான வறட்சி நிலவி வந்தது. இந்நிலையில் சுமார் ஒரு மாதத்திற்குப்பிறகு கொடைக்கானலில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக கொடைக்கானலில் உள்ள நகர்ப்பகுதிகளான செண்பகனூர், மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களிலும் கனமழை பெய்தது.

இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானலில் ஒருவருடத்திற்கு பிறகு ஆலங்கட்டி மழையும் பெய்தது. கொடைக்கானலில் ஒருசில பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பெய்த கனமழையால் காட்டுத்தீயும் கட்டுக்குள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்பொழுது பெரிதா கனமழையால் கொடைக்கானல் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: