கொரோனா காலத்திற்கு பிறகு திடீர் மாரடைப்பு ஏற்பட கோவிட் தடுப்பூசி காரணமா?: ஒன்றிய அரசு பதில்

டெல்லி: கொரோனா காலத்திற்கு பிறகு திடீர் மாரடைப்பு ஏற்பட கோவிட் தடுப்பூசி காரணம் என எந்த அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என்று மக்களவையில் ஒன்றிய சுகாதார துறை விளக்கமளித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை உறுப்பினர் ராஜூ ரஞ்சன்சிங் கொரோனா காலத்திற்கு பிறகு திடீரென மாரடைப்பு ஏற்பட கூடிய நிகழ்வு அதிகரித்துள்ளதா என்றும் இதற்கு கொரோனா தடுப்பூசி காரணமா என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் கொரோனா காலத்திற்கு பிறகு அதிகளவு மாரடைப்பு ஏற்படுவது குறித்து எந்த ஒரு தரவுகளும் ஒன்றிய அரசிடம் இல்லை என்று தெரிவித்தார். அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கு பிறகு மாரடைப்பு அதிக ஏற்படுகிறது என்பதற்கான எந்த ஒரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என அமைச்சர் விளக்கமளித்துள்ளார். மேலும், இது தொடர்பாக எந்தவொரு ஆய்வுகளையும் ஐசிஎம்ஆர் மேற்கொள்ளவில்லை எனவும் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: