×

குளத்தூரிலிருந்து -பொன்னாயூர் இடையே குறுகலான சாலை பகுதிகளை விரிவாக்க கோரிக்கை

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி அருகே உள்ள குளத்தூரிலிருந்து பொன்னாயூர்  செல்லும் சாலை குறுகலாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில் விபத்துக்களை தவிர்க்க, குறுகலான பகுதிகளை விரிவுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ள குளத்தூரிலிருந்து ராசிசெட்டிபாளையம், நல்லூத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக பாலக்காடுரோடு பொன்னாயூக்கு செல்லும் சாலையில், பகல் மற்றும் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து உள்ளது. இப்பகுதியில் ஆங்காங்கே கிராமங்கள் பல இருப்பதால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் மற்றும் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்தும் அதிகம் உள்ளது.

ஆனால் இந்த வழித்தடத்தின் பல இடங்களில் ரோடு குறுகலாக உள்ளது. அதிலும் பொன்னாயூர் செல்லும்  கிராமப்புற ரோட்டின் ஒரு பகுதியை கடந்து செல்லும் பிஏபி கால்வாயின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறு பாலமானது சில ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டது. இருப்பினும், வாகனங்கள் சென்று வர ஏதுவாக அமைக்காமல் குறுகலாக காணப்படுகிறது. மேலும், அந்த இடத்தில் வளைவுகள் அடுத்தடுத்து உள்ளதால், குறுகலான பாலம் எதுவென்று தெரியாமல் கண்ணில் தென்படுகிறது.
குறுகலான பாதை என்பதால் இந்த இடத்தில் அடிக்கடி விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. எனவே, வாகன போக்குவரத்து வசதியாக அம்பராம்பாளையத்திலிருந்து குளத்தூர் வழியாக பொன்னாயூர் செல்லும் குறுகலான சாலை மற்றும் சிறு பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kulatur-Ponnayur , Demand for widening of narrow road sections between Kulatur-Ponnayur
× RELATED புதுச்சேரியில் வீடுகளுக்கான மின்...