×

தென்னாப்பிரிக்காவை தாக்கிய ஃப்ரெடி புயலால் உருக்குலைந்த மலாவி : பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரிப்பு!!

பிளான்டைர் (மலாவி): கிழக்கு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயல் தாக்கியதால், தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மலாவியின் இயற்கை வளங்கள் மற்றும் பருவகால மாற்றங்களுக்கான அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ‘தெற்கு மலாவியில் பெரு வெள்ளம் ஏற்படும். சூறாவளி புயலால் நேற்று பரவலாக பாதிப்பு ஏற்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவை சூறையாடிய பருவகால சூறாவளியால் பலியானோர் எண்ணிக்கை 326-ஐ தாண்டியுள்ளதாகவும், நூற்றுக் கணக்கானவர்களைக் காணவில்லை என்றும், தெற்கு மலாவியில் நிலைமை மோசமடைந்து உள்ளதாகவும், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், சாலைகள் மற்றும் பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பல இடங்களில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில், பிளாண்டயர் அருகே புயலால் பேரழிவுக்குள்ளான பகுதியைப் பார்வையிடச் சென்ற அந்த நாட்டு ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மழையினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளிலிருந்து மக்களை மீட்கவும், இறந்தவர்களின் உடலை மீட்கவும் உலகளாவிய உதவி தேவைப்படுகிறது.புயலால் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளின் இடிபாடுகளிலிருந்து அழுகிய உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டுவருகின்றனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அச்சப்படுகிறோம் எனத் தெரிவித்திருக்கிறார்.

Tags : Malawi ,Cyclone Freddie ,South Africa , தென்னாப்பிரிக்கா, ஃப்ரெடி, புயல் , மலாவி
× RELATED மலாவி துணை அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து