உதகை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் ஆஜர்: தேயிலை தோட்டத்தை ஆக்கிரமித்ததாகப் புகார்

உதகை: ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தை ஆக்கிரமிக்க முயன்ற வழக்கில் அதிமுக முள்ளால் அமைச்சர் புத்திசந்திரன் உதகை நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மனிகள் கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. இவர் நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கணக்காளராக பணியாற்றி கடந்த 2011ம் ஆண்டு ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில் தனக்கு சொந்தமான 15 சென்ட் தேயிலை தோட்டத்தை அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான புத்திசந்திரன் ஆக்கிரமிக்க முயன்றதாக ராஜு போலீசில் புகார் அளித்தார். புத்திசந்திரன் தரப்பினர் தனது நிலத்தில் இருந்த 300க்கும் மேற்பட்ட தேயிலை செடிகளை ஒக்லைன் இயந்திரம் மூலம் அகற்றிவிட்டு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக புகாரில் அவர் கூறி இருந்தார்.

இது குறித்து விசாரித்த போலீசார் தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைதல் நிலத்தை சேதப்படுத்துதல், அச்சுறுத்துதல் என மூன்று வழக்குகள் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை அடுத்து முன்ஜாமீன் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தை புத்திசந்திரன் அணுகினார். பின்னர் உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி உதகை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்த அவருக்கு 2 பேர் ஜாமின் தாரர்களாக கையெழுத்திட்டனர். இதை அடுத்து அவரை 15 நாட்கள் மன்சூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. 

Related Stories: