×

வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ்க்கு சமூக பொறுப்பு இல்லையா?.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி

மதுரை: பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட டெல்லி பாஜக நிர்வாகிக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி எழுப்பினர். பிரசாந்த் உம்ராவின் ஒரு டிவிட்டால் அனைத்து ரயில் நிலையங்களும் நிரம்பி வழிந்தன. ஒரு பெட்டியில் ஆயிரம் தொழிலாளர்கள் பயணம் செய்யக் கூடிய சூழல் உருவானதை நானே நேரில் பார்த்தேன். இதுபோன்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்தது ஏன்? வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ்க்கு சமூக பொறுப்பு இல்லையா? பிரசாந்த் உம்ராவ் ஒரு வழக்கறிஞர் என்றால் இதன் தீவிர தன்மை தெரியுமா? தெரியாதா? என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். பா.ஜ.க. நிர்வாகிக்கு முன்ஜாமின் தர அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Prashant Umrao ,Maduraik , Does Prashant Umrao, who spread rumours, not have social responsibility? High Court questions Maduraik.
× RELATED மகன் உடலை மறு உடற்கூராய்வு...