×

தெலங்கானா மாநிலம் செக்கந்திராபாத்தில் பயங்கர தீ விபத்து... 4 சிறுமிகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி...

ஹைதராபாத் : தெலங்கானா மாநிலத்தில் நேற்று இரவு அடுக்குமாடி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 சிறுமிகள் உட்பட 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தெலங்கானாவின் செக்கந்திராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாற்று 8வது மாடியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று தீயணைப்பு படையினர் கட்டிடத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் கட்டிடத்தில் இருந்த 11 பேர் மீட்கப்பட்டனர்.

 இதனிடையே கட்டிடத்தில் இருந்த இரும்பு கம்பிகளால் தீயணைப்பு வீரர்களால் எளிதில் செல்ல முடியவில்லை என்றும் குடியிருப்பு வாசிகளை மீட்கும் வரை அவர்கள் அனைவருக்கும் ஆக்சிஜன் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பப்பட்டதாகவும் அமைச்சர் தலசனி ஸ்ரீனிவாஸ் யாதவ் தெரிவித்தார்.ஷார்ட் சர்கியூட்டால் தான் இந்த தீ விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்கள் தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மற்றும் கம்மம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் கட்டிடத்தின் உள்ளே யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.

Tags : Secunderabad ,Telangana , Telangana, Secunderabad, fire, accident
× RELATED கொல்லம்-செகந்திராபாத் சிறப்பு ரயில் இன்று ரத்து