அமெரிக்க டிரோன் மீது எரிபொருள் கொட்டிய ரஷ்யா: 45 நிமிட விடியோ காட்சி வௌியீடு

கீவ்:  அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ரஷ்ய போர் விமானம் எரிபொருளை ஊற்றும் விடியோ காட்சியை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வௌியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு அருகே கருங்கடல் பகுதிக்கு மேலே பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான எம்க்யூ-9 என்ற ஆளில்லா விமானத்தை ரஷ்ய போர் விமானங்கள் இடைமறித்து தாக்கின.

இதில் எம்க்யூ-9 கருங்கடலில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பென்டகன் ஒரு வீடியோ காட்சியை வௌியிட்டுள்ளது. அதில், “அமெரிக்காவின் எம்க்யூ-9 ஆளில்லா விமானத்தின் மீது ரஷ்யாவின் எஸ்யூ-27 போர் விமானம் எரிபொருளை ஊற்றுகிறது. அதன் பிறகும் ரஷ்ய போர் விமானம் இடித்து தள்ளுவதில் எம்க்யூ-9 ஆளில்லா விமானத்தின் பாகங்கள் சேதமடைகின்றன”. சுமார் 45 நிமிடங்கள் ஓடும் இந்த விடியோ பதிவு வௌியாகியுள்ளது.

Related Stories: